சென்னிமலை: சென்னிமலை அருகே, பட்டத்தரசி அம்மன் கோவிலில் நடந்த, பொங்கல் விழாவில் திரளான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். சென்னிமலை அருகே, சொக்கநாதபாளையம் ஏரிக்காட்டில் உள்ளது பட்டத்தரசி அம்மன் கோவில். சுயம்புலிங்கமான இக்கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பொங்கல் விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு பொங்கல் விழா கடந்த, 1ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. மேலும், பொங்கல் விழா, மாவிளக்கு எடுத்து வருதல், அம்மன் அழைத்தல், படைக்கலம் கொண்டு வருதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. சரளைக்காடு, கரைப்புதூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.