அந்தோணியார் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மே 2018 02:05
வால்பாறை:முடீஸ் அந்தோணியார் ஆலய தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வால்பாறை அடுத்துள்ள முடீஸ் புனித அந்தோணியார் ஆலயத்தின் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி ஆலய பங்கு தந்தை ஜார்ஜ் சகாயராஜ் முன்னிலையில் பங்கு தந்தை வின்சென்ட் ஜெபராஜ் திருக்கொடி ஏற்றினார். வரும், 12ம் தேதி இரவு, 7:00 மணிக்கு புனித அந்தோணியார் சொருபம் தாங்கிய தேர்பவனி நடக்கிறது. 13ம் தேதி குரு ஆரோக்கிய எட்வின் தலைமையில் சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தை மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.