பதிவு செய்த நாள்
11
மே
2018
12:05
எலச்சிபாளையம்: எலச்சிபாளையத்தில், கண்ணனூர் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. எலச்சிப்பாளையம், கண்ணனூர் மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 1ல் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு, 108 திருவிளக்கு பூஜை, அம்மனுக்கு அபி ?ஷகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், சுவாமி அருள்பாலித்தார். நேற்று காலை, 7:00 மணிக்கு, மாவிளக்கு பூஜை, கிடா வெட்டுதல், 8:00 மணிக்கு, தீர்த்தக்குடம், பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. அக்னி சட்டி எடுத்து, அலகு குத்தி, பக்தர்கள், அம்மனுக்கு வேண்டுதலை நிறைவேற்றினர். மாலை, 4:00 மணிக்கு, மாவிளக்கு பூஜை,அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை காலை, 7:00 மணிக்கு, கம்பம் மற்றும் கும்பம் ஊர் கிணற்றில் விடுதல், மஞ்சள் நீராட்டு விழாவோடு விழா நிறைவடைகிறது.