பதிவு செய்த நாள்
11
மே
2018
12:05
மோகனூர்: ஆண்டிபாளையம், தொட்டிய கருப்பண்ணார் கோவில் திருவிழா நடக்கிறது. மோகனூர் ஒன்றியம், பெரமாண்டம்பாளையம் ஊராட்சி, ஆண்டிபாளையத்தில் தொட்டிய கருப்பண்ண சுவாமி கோவில் திருவிழா, நான்காம் நாளாக நடைபெற்றது. முதல் நாள் பூ போட்டு விழா துவங்கியது. தொடர்ந்து, சிறப்பு அபி?ஷக, ஆராதனைகள் நடந்தன. நேற்று முன்தினம், மணப்பள்ளி காவிரி ஆற்றில் இருந்து, தீர்த்தம் எடுத்து வந்து, சுவாமிக்கு சிறப்பு அபி?ஷகம் நடந்தது. நேற்று அதிகாலை, பொங்கல் வைத்து கிடா வெட்டுதல், தொடர்ந்து, கரகம் பாலித்து சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்துள்ளனர்.