பதிவு செய்த நாள்
15
மே
2018
01:05
கரூர்: கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவில், பக்தர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதி மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்து தரக் கோரி, கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. இந்து மக்கள் கட்சி சார்பில், மாவட்ட தலைவர் மணி மற்றும் நிர்வாகிகள் கலெக்டர் அன்பழகனிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: கரூர், ஜவஹர் பஜாரிலுள்ள, மாரியம்மன் கோவில், வைகாசி திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் தங்க, குளிக்க வசதி செய்த தர வேண்டும். மேலும், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும். அதே போல், கம்பம் ஆற்றுக்கு செல்லும் போது, வாண வேடிக்கையின் போது, போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். திருவிழாவுக்கு, பெண்கள் அதிகம் வருவர். அவர்களின் பாதுகாப்புக்காக, காமராஜர் மார்க்கெட் பகுதியிலுள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.