பதிவு செய்த நாள்
22
மே
2018
01:05
எலச்சிபாளையம்: சித்தாளந்தூர், திருவேங்கடபெருமாள் சுவாமி கோவிலில், வரும், 25ல் விழா துவங்குகிறது. திருச்செங்கோடு அடுத்த, சித்தாளந்தூர் அருகே, தொட்டிபாளையம் திருவேங்கட பெருமாள், வீரமாத்தியம்மன், நல்லையசுவாமிக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி, வரும், 25 இரவு, 9:00 மணிக்கு வாஸ்து சாந்தி, சுதர்சன ஹோமம், நவக்கிரஹ சாந்தியுடன் விழா துவங்குகிறது. 26 அதிகாலை, 3:00 மணிக்கு காலை பூஜை ஆரம்பமாகும். தொடர்ந்து, திருக்கோடி தீபம் ஏற்றுதல், மடிப்பழம் கட்டுதல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கும். வரும், 27 நல்லைய சுவாமி, வீரமாத்தி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், முப்போடு அழைத்தல் நடக்கும். அதன்பிறகு, கிடா, சேவல், பன்றி முதலியவை பலியிடப்படும். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.