பதிவு செய்த நாள்
22
மே
2018
01:05
பேரையூர், பேரையூர் அருகே வையூர் நல்லமரம் கிராமம் சொக்கம்மாள் கோயில் கும்பாபிஷேகம் கடந்த மார்ச் 29 ல் நடந்தது. இதையடுத்து விநாயகர், சொக்கம்மாள், கருப்பசாமிக்கு 48 நாள் மண்டல பூஜை, நிறைவு பூஜை நேற்று நடந்தது. கருப்பசாமிக்கு சக்தி பூஜைகள் நடந்தன. இதைதொடர்ந்து சிறப்பு யாகம், அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை டிரஸ்ட் குழு தலைவர் கட்டாரி ராதாகிருஷ்ணன், ஜெயக்குமார், விஸ்வரூபகேசவன், சுப்பாரெட்டி, துரைபாஸ்கர், கஜேந்திரன், ராமகிருஷ்ணன், சொக்கப்பன் செய்தனர்.