வைகானஸ அத்ரிபுரோக்த ‘ஸமூர்த்தார்சனாதி கரணம்’ எனும் நூலில், மகாவிஷ்ணுவை சிறப்பாக வழிபாடு செய்திட ஐந்து நாட்கள் கூறப்பட்டுள்ளன. திருவோண நட்சத்திரம், சுக்ல துவாதசி, கிருஷ்ண துவாதசி, பவுர்ணமி, அமாவாசை திதிகள் ஆகிய ஐந்து நாட்கள் சிறப்புமிக்க ‘விஷ்ணு பஞ்சதினாநி’ எனப்படுபவை.