பன்னிரு மாதமும் வருகிற திருவாதிரை நட்சத்திரம் உள்ள நாளில் விரதமிருந்து உற்சவம் செய்வதால், அளவில்லாப் பயனையும், ஆயிரம் அச்வமேத யாகங்களின் பயனையும், கோடி யாகங்களின் பயனையும், கோடி கன்யாதானங்களின் பயனையும் பெறுவார்கள். சிவதீட்சை பெற்றவர்கள் யாராயினும், சிவ நட்சத்திரமாகிய திருவாதிரையில் சிவனைப் பூசிக்காவிடில், அவர் பாவியாக நரகத்தை அடைவார் என்றும் எச்சரித்துக் கூறுகிறது.