திருப்புத்துார் : திருப்புத்துார் அருகே தேவரம்பூரில் விநாயகர்,அய்யனார்.அம்மன் உள்ளிட்ட ஐந்து கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இக்கிராமத்திலுள்ள இஷ்டசித்தி விநாயகர், பொன்னரசு கூத்தஅய்யனார், பூமாயி அம்மன், சின்னக்கருப்பர், பொட்டலிக்கருப்பர் ஆகிய கோயில்களுக்கு கிராமத்தினர் சார்பில் திருப்பணி நடந்தது. தொடர்ந்து மே 25ல் யாகசாலை பூஜை துவங்கியது. மூன்றாம் நாள் காலை 6:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை துவங்கியது. தொடர்ந்துகோபூஜை, லெட்சுமி பூஜை நடந்து விக்ரகத்திற்கு காப்புக்கட்டப்பட்டது. யாகசலையிலிருந்து கடம் புறப்பாடாகி ஐந்து கோயில்கோபுர விமானங்களிலும் புனித நீரால் கும்பாபிஷேகம் நடந்தது.