சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதியில் பிரதோஷ விழா நடந்தது. சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் பாண்டுவனேஸ்வரர் கோவிலில் நடந்த விழாவிற்கு, வழிபாட்டு மன்ற தலைவர் நாட்டார் ராமலிங்கம் தலைமை தாங்கினார். ரவி குருக்கள். கண்பதி முன்னிலையில் பிரதோஷ நாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதே போல் சங்கராபுரம் முதல்பாலமேடு ஏகாம்பரேஸ்வரர் கோவில், தியாகராசபுரம், மஞ்சபுத்துர், கடுவனுர் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.