திருப்புத்தூர் வைகாசி விசாக விழா நிறைவு: 12 ஆண்டுகளுக்கு பின் தெப்பம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மே 2018 10:05
திருப்புத்துார் : திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி விசாக விழாவைமுன்னிட்டு 12 ஆண்டுகளுக்குப் பின் தெப்பம் நடந்தது. வைகாசி விசாக விழா மே 19ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் இரவில் திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து திருக்கல்யாணம், தேரோட் டம் நடந்தது.
நேற்று முன் தினம் காலை 10:00 மணிக்கு பிரதோஷ நாயகரும், அஸ்திரத்தேவரும் சீதளிகுள மண்டபடித்துறை எழுந்தருளினர். சிறப்பு அபிேஷக,ஆராதனைகளுக்குப் பின் தீர்த்தவாரி நடந்தது. மாலை 6:45 மணிக்கு ஐம்பெரும் கடவுளர்களும் புறப்பாடாகி சீதளி தெப்பக்குள மண்டபம் எழுந்தருளினர். இரவு 9:30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு 10:30 மணிக்குசீதளிக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள நிலைத் தெப்பத்தில் சுவாமி எழுந்தருளல் நடந்தது. முதன் முறையாக இக்கோயிலில் பிரத்யேகமாக ரூ 20 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள நிரந்தர மரத் தெப்பத்தில் ஐம்பெரும் கடவுளர்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 12 ஆண்டுகளுக்குப் பின் தெப்பத்தில் சுவாமி எழுந்தருளலை பக்தர்கள் குளத்தின் நான்கு கரைகளிலும் கூடி தரிசித்தனர். பின்னர் சுவாமி கோயிலுக்கு புறப்பாடாகி, திருவீதி உலா நடந்தது.தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து மஞ்சள் நீராடல் நடந்து கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைந்தது.