பதிவு செய்த நாள்
30
மே
2018
01:05
அந்தியூர்: அத்தாணி அருகே, சவுண்டப்பூரில், தோன்றாயன்காடு பகுதியில், பிரசித்தி பெற்ற, பெரியாண்டவர், ராமர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு முதலாமாண்டு பண்டிகை நடக்கிறது. இதையொட்டி கோவில் வளாகத்தில், 108 சங்கு பூஜை நேற்று நடந்தது. முன்னதாக சவுண்டப்பூரில் உள்ள, பவானி ஆற்றுக்கு சென்று, பக்தர்கள் புனித தீர்த்தம் கொண்டு வந்தனர். பூஜையில், அத்தாணி, சவுண்டப்பூர், கருப்பணகவுண்டன் புதூர், செம்புளிச்சாம்பாளையம், ஓடைமேடு பகுதி பக்தர்கள், திரளாக கலந்து கொண்டனர்.