கரூர்: கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவையொட்டி, செட்டிநாடு சிமென்ட் ஆலை சார்பில், கோவில் அருகே தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது. கோவில் அறங்காவலர் முத்துகுமார் திறந்து வைத்து, பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கினார். சிமென்ட் ஆலை துணைத் தலைவர் முத்துகருப்பன், திருக்குறள் பேரவைத் தலைவர் மேலை பழனியப்பன், மேலாளர் சாமிநாதன் உள்பட, பலர் விழாவில் பங்கேற்றனர்.
* கரூர் மத்திய நகர ரஜினி மக்கள் மன்றம் சார்பில், சுபாஷ் சந்திரபோஸ் சிலை அருகே, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதில், மன்ற மாவட்ட செயலாளர் ராஜா, துணைச் செயலாளர் ரவி, நகரச் செயலாளர் வரதராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.