குளங்களில் தண்ணீர் இல்லாததால் கடலில் நடந்த தெப்பத் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மே 2018 03:05
தஞ்சாவூர்: அதிராம்பட்டினம் அருகே விநாயகர் கோவில் திருவிழா தெப்பம் விட,குளத்தில் தண்ணீர் இல்லாததால்,கடலில் தெப்பம் நிகழ்ச்சியை கிராமத்தினர் நடத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அடுத்த கழுமங்குடா கிராமம் கரையூர் தெருவில் அமைந்துள்ள சக்தி விநாயகர் கோவில் திருவிழா கடந்த 10 தினங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை தெப்ப திருவிழா நடைபெற இருந்தது. சமீப காலமாக இப்பகுதியில் மழை பெய்யாததால் ஏரி, குளங்கள் தண்ணீரில்லாமல் வறண்ட நிலையில் கிடந்தது. குளங்களில் தண்ணீரில்லாமல் எப்படி தெப்பத் திருவிழாவை கொண்டாடுவது என்று யோசித்த கிராமத்தார்கள் கடலில் தெப்பத் திருவிழா நிகழ்ச்சி நடத்தலாம் என்று முடிவு செய்தனர். இதையடுத்து 3 பைபர் படகுகளை ஒன்றாக கட்டி அதில் அலங்கரிக்கப்பட்ட சாமியை வைத்து வண்ண விலக்குகள் எரிய வாணவேடிக்கைகளுடன் இன்று அதிகாலை 3 மணியளவில் கடலில் வளம் வந்தது. இந்த நிகழ்ச்சி பார்ப்பதற்கு கண்ணுக்கு விருந்தாக அமைந்ததால் கடற்கரையோர கிராமங்கள் மட்டுமல்லாமல் மற்ற பகுதி மக்களும் நேரில் வந்து கண்டு ரசித்தனர். சுற்றுவட்டாரப் பகுதிகளிலேயே கடலில் தெப்பத் திருவிழா நடைபெற்றது இதுவே முதன் முறையாககும் என்றனர் கிராமத்தினர்.