பதிவு செய்த நாள்
02
ஜூன்
2018
01:06
செஞ்சி: செஞ்சி சிறுகடம்பூர் கங்கையம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. செஞ்சி சிறுகடம்பூரில் உள்ள பழமையான கங்கையம்மன் கோவில் திருப்பணிகள் செய்து புதுப்பித்து மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 31ம் தேதி கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி,பிரவேச பலி, ரக்ஷா பந்தனம், கலச ஆவாகனம், கலச பிரதிஷ்டை மற்றும் யாகசாலை பூஜையும், மகா தீபாராதனையும் நடந்தது. இரவு 9:00 மணிக்கு சிலை பிரதிஷ்டையும், அஷ்டபந்தன மருந்து சாற்றுதலும் நடந்தது. நேற்று அதிகாலை 5:30 மணிக்குகோ பூஜை, மூலமந்திர பாராயணம், பிம்பசுத்தி, நாடி சந்தனம், தம்பதி பூஜையும், 8:00 மணிக்கு அம்மன் கண் திறத்தலும், 8:30மணிக்கு மகா பூர்ணாஹூதியும், 8:40 மணிக்கு கடம் புறப்பாடும், 8:50 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகமும், அன்னதானமும் நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர்மற்றும் சிறுகடம்பூர் கிராம பொது மக்கள் செய்தனர்.