பதிவு செய்த நாள்
04
ஜூன்
2018
10:06
கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாணத்தின் போது, மணக்கோலத்தில் அருள்பாலித்த, வள்ளி மணவாள பெருமானை தரிசிக்க, ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கும்மிடிப்பூண்டி அடுத்த, சின்னம்பேடு கிராமத்தில், சிறுவாபுரி, பாலசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. மயிலை சிறுவாபுரி பிரார்த்தனை குழுவின், 25ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, நேற்று, சிறுவாபுரி கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது. அதை முன்னிட்டு, வள்ளி மணவாள பெருமான் உற்சவ மூர்த்திக்கு, சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து, மேள தாளங்கள், வேத மந்திரங்கள் முழங்க, திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதை காண, ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். திருமண வரன் வேண்டி, திருக்கல்யாணத்தில் பங்கேற்ற பக்தர்கள், மணக்கோலத்தில் அருள்பாலித்த வள்ளி மணவாள பெருமானுக்கு அணிவித்த மாலையை பிரசாதமாக பெற்றனர். அதை அணிந்து, உள்புறப்பாடு சென்ற உற்சவ மூர்த்தியை பின் தொடர்ந்தபடி சென்று, முருகனை வழிபட்டனர்.