ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்ட கால்கோள் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூன் 2018 12:06
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா ஆக. 13 ல் நடைபெற உள்ளது. இதற்கான கால்கோள் விழா நேற்று காலை 7:00 மணிக்கு நடந்தது. தேர் சக்கரத்திற்கு வாசுபட்டர் சிறப்பு பூஜை செய்தார். அதன் பின் தேரில் கால்கோள் நடப்பட்டது. விழாவில் தக்கார் ரவிசந்திரன் செயல் அலுவலர் நாகராஜன், மணியம் சுதர்சன் மற்றும் பட்டர்கள், கோயில் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.