பழநி; ஞாயிறு விடுமுறை, சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலில் குவிந்தபக்தர்கள் மூன்றுமணி நேரம் காத்திருந்து சுவாமிதரிசனம் செய்தனர். விடுமுறை நாட்களில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. நேற்று ஞாயிறு விடுமுறை, சுபமுகூர்த்ததினத்தை முன்னிட்டு, காலை முதல் குவிந்த பக்தர்கள், புதுமணதம்பதிகள் ரோப்கார், வின்ச் ஸ்டஷேன்களில் 2 மணிநேரம்காத்திருந்தனர். மலைக்கோயில் பொது தரிசனம் வழியில் மூன்று மணிநேரம் காத்திருந்து முருகரை தரிசனம் செய்தனர். தங்கரதப்புறப்பாட்டை காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.