சோழவந்தான்:சோழவந்தான் ஆர்.எம்.எஸ். காலனி அன்னை ஸ்ரீசீதாபிராட்டியார் ஞானாலயத்தில் குருபூஜை விழா நடந்தது. அன்னைக்கு நான்கு அலங்காரங்கள் மற்றும் 19 வகை சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. இறைநெறியர் முனைவர் விஜயராஜன்பேசினார். பக்தர்களுக்கு அன்னதானமும், மாலை 5:00 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடந்தது. ஏற் பாடுகளை நிர்வாகி வேதராஜா செய்திருந்தார்.