வடமதுரை, சித்துவார்பட்டி ஊராட்சி நொச்சிகுளத்துபட்டியில் விநாயகர், காளியம்மன், மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் மாலை தீர்த்தம், முளைப்பாரி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு முதல் கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜைகள் முடிந்ததும், கடங்கள் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நடந்தது. துாங்கணம்பட்டி ரங்கநாத பெருமாள் கோயில் அர்ச்சகர் ஜெகநாதன் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். பழைய சித்துவார்பட்டி, ஊத்துபட்டி, சித்துவார்பட்டி, மலைக்கோட்டை சுற்றுப்பகுதி மக்கள் பங்கேற்றனர்.