நெட்டப்பாக்கம்: அற்பிசம்பாளையம் நாகமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. மடுகரை அடுத்துள்ள தமிழக பகுதியான அற்பிசம்பாளையம் கிராமத்தில் உள்ள நாக முத்துமாரியம்மன் கோவில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி, காலை 6:௦௦ மணிக்கு இரண்டாம் காலை பூஜை, 8:௦௦ மணிக்கு கலசங்கள் புறப்பாடு, காலை 9:௦௦ மணிக்கு நாகமுத்து மாரியம்மன் கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில், அற்பிசம்பாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.