Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

அந்தியூர் கோவிலில் அணையா விளக்கு கீதா பஜனில் தொடர் நாம பஜனை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பகாசூரனுக்கு செல்லாத்தூரில் கும்பம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2018
01:06

ஆர்.கே.பேட்டை : செல்லாத்துார் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில், நேற்று முன்தினம், பகாசூரனுக்கு கும்பம் படைக்கப்பட்டது. நேற்று திரவுபதியம்மன் திருக்கல்யாணம் நடந்தது. ஆர்.கே.பேட்டை அடுத்த, செல்லாத்துார், திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா, 10 நாட்களாக நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு, பகாசூரன் கும்பம் நிகழ்ச்சியுடன் தெருக்கூத்து துவங்கியது. செல்லாத்துார் மற்றும் ஆர்.கே.பேட்டையில் வீதி வலம் வந்த பகாசூரனுக்கு பக்தர்கள் கும்பம் படைத்தனர். அன்று இரவு, 10:00 மணியளவில், தெருக்கூத்து நிகழ்ச்சி துவங்கியது.முதல் நாளில், வில் வளைப்பு கூத்து நடத்தப்பட்டது. நேற்று, அதிகாலை வரை நடந்த, தெருக்கூத்து முடிவில், பிராமனர் வேடம் தரித்து அஞ்சாத வாசம் மேற்கொண்டிருந்த பாண்டவர்களில், அர்ச்சுனன், வில் வளைப்பு நிகழ்ச்சியில் வெற்றி பெற்று,திரவுபதியம்மனை மணம் முடித்தார்.தொடர்ந்து, வரும், 16ம் தேதி வரை, தெருக்கூத்து நடைபெற உள்ளது. வரும், திங்கட்கிழமை மாலை, அர்ச்சுனன் தபசு நடக்கிறது.அதை தொடர்ந்து, 17ம் தேதி, காலை, துரியோதனன் படுகளமும், அன்று மாலை, தீமிதி திருவிழாவும் நடைபெறும். திருவிழாவை ஒட்டி, திரளான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டு உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சேத்தியாத்தோப்பு: கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவில் மாசி மகம் மகோற்சவம் கொடியேற்று விழா ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலில், 20 ஆண்டுகளுக்கு பின், மஹா கும்பாபிஷேக விழா இன்று ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மாசி பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் பிரம்மோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
செந்துறை: - நத்தம் செந்துறையில் ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar