பதிவு செய்த நாள்
09
ஜூன்
2018
01:06
விவேகானந்தர் பேரவை கீதா பஜனின், தொடர் நாமபஜனை நிகழ்ச்சி, வெள்ளலுாரில் நாளை நடக்கிறது. வெள்ளலுாரில் கடந்த 15 ஆண்டுகளாக செயல்படுகிறது, சுவாமி விவேகானந்தர் பேரவை. இப்பேரவை சார்பில், ஒவ்வொரு ஞாயிறன்றும், மூன்று மணி நேரம் கீதா பஜனை நிகழ்ச்சி நடக்கிறது. அன்பர்களின் வீடுகள், கோவில்களில் நடக்கும் பஜனை நிகழ்ச்சியில், இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள் என, நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று, விநாயகர், சிவன், சக்தி, பெருமாள், முருகன், ஐயப்பன் பாடல்களுடன், ஜால்ரா, மிருதங்கம், ஹார்மோனியம் உள்ளிட்ட இசைக் கருவிகளுடன், பஜனை பாடல்கள் பாடுகின்றனர். கீதா பஜன் துவங்கி 15 ஆண்டு நிறைவடைந்ததையடுத்து, இதற்கான விழா வெள்ளலுார் - இடையர்பாளையம் ரோடு, ரைஸ் மில் அருகே உள்ள அரசண்ணன் கோவில் வழிபாட்டு மண்டபத்தில், நாளை நடக்கிறது. காலை, 7:00 முதல் இரவு, 7:00 மணி வரை, தொடர் நாம பஜனையும், தொடர் ஆரோக்ய ஐஸ்வர்ய ேஹாமமும் நடக்கின்றன. வெள்ளலுார், சரவணம்பட்டி, வீரகேரளம், சிறுமுகை மற்றும் அன்னுார் அச்சம்பாளையத்தை சேர்ந்த பஜனை குழுவினர்கள் பங்கேற்கின்றனர்.