காரியாபட்டி: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அடுத்த மாங்குளம் செண்பகமூர்த்தி கோயில் சுவாமி சிலைகளை உடைத்தவர்களை போலீசார் தேடுகின்றனர்.இக்கோயிலில் நேற்று முன்தினம் இரவு 8:00மணிக்கு டூவீலர்களில் வந்த மர்ம நபர்கள் சுவாமி சிலைகளை உடைத்து சென்றனர். சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்த போது டூ வீலரை போட்டுவிட்டு தப்பினர். அங்கு நின்ற டூவீலர் ராணுவ வீரர் ஆப்ரகாம்லிங்கனுக்கு சொந்தமானது என்பது தெரியவர, மற்றொரு ராணுவ வீரர் ராஜா மற்றும் அடையாளம் தெரியாத 3 பேர் உட்பட 5 பேர் மீது ஆவியூர் போலீசில் கோயில் பங்காளிகள் புகார் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் ஆப்ரகாம் லிங்கனை பிடித்து விசாரிக்கின்றனர். மற்றவர்களை தேடுகின்றனர். இன்று கொடி ஏற்றி அடுத்த வாரம் திரு விழா நடக்க இருந்த நிலையில், சுவாமி சிலைகளை உடைத்துள்ளதால் பக்தர்கள் வருத்தமடைந்தனர்.