திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு: இரும்பை மாகாளேஸ்வரர் கோவிலில், திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. புதுச்சேரி அருகேயுள்ள இரும்பை கிராமத்தில், பிரசித்தி பெற்ற மதுசுந்தரநாயகி உடனுறை மாகாளேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், மாகாளேஸ்வரர் பிரதோஷ வழிபாட்டு சிவனடியார் திருக்கூட்டத்தின் சார்பில், தமிழ்வேதமாகிய திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. காலை 8:00 முதல் மாலை 6:00 மணி வரை நடந்த நிகழ்ச்சியில், சிவனடியார் திருக்கூட்ட சேதுபதி திருவாசகம் ஓதினார். நிகழ்ச்சியில், பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் இரும்பை நாதர் பிரதோஷ வழிபாட்டுக்குழு சிவனடியார் திருக்கூட்டம் செய்திருந்தது.