நாயகத்துக்கு தும்மல் வந்தால், தங்களின் இரு கைகளாலோ அல்லது துணியாலோ முகத்தை மூடிக்கொண்டு சப்தத்தைக் குறைத்துக் கொள்வார். தும்மும் போது, ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று கூறச் சொல்லியுள்ளார். “அவர்களுடைய தோழர் அல்லது சகோதரர் ‘யர்ஹ முகல்லாஹ்’ (அல்லாஹ் உமக்கு நல்லருள் புரிவானாக) என்று சொன்னால், தும்மியவர் இவருக்கு ‘யஹ்தீகுமுல்லாஹு வயுஸ்லிஹு’ (அல்லாஹ் உமக்கு நேர்வழிகாட்டி, உமது காரியத்தை சீராக வைப்பானாக) என்று கூற வேண்டும்,” என அவர்கள் சொல்லியுள்ளார்கள்.