சுத்தத்தின் மூலம், சொர்க்கத்தை அடையும் வழியை நபிகள் சொல்கிறார். “பரிசுத்த எண்ணத்தின் காரணமாக எத்தனையோ சிறிய நன்மைகள் பெரிய நன்மைகள் ஆகிவிடுகின்றன. பரிசுத்த எண்ணமில்லாத காரணத்தால் எத்தனையோ பெரிய நன்மைகள் அற்ப காரியங்களாகி விடுகின்றன. இஸ்லாம் சுத்தமுடையதாகும். ஆகவே, நீங்களும் சுத்தமானவர்களாக இருங்கள். ஏனெனில் சுத்தமுடையவனே சொர்க்கத்தில் நுழைவான். அல்லாஹ் பரிசுத்தமானவன். பரிசுத்தத்தையே விரும்புகிறான். அல்லாஹ் மணமுள்ளவன். நறுமணத்தை விரும்புகிறான். எனவே, உங்கள் இல்லங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அப்போது உங்களுக்கு சொர்க்கம் கிடைக்கும்” என்கிறார்.