Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இந்தவார பிரசாதம் தெப்பக் குளங்களால் பெருமை!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அன்பின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2018
03:06

* உள்ளத்தில் அன்பு இல்லாமல் இன்பம் உண்டாகாது. அன்பே வாழ்வின் ஆதார சக்தி.
* கடவுள் என்னும் ஒன்று மட்டுமே உண்மை. உயிர்கள் எல்லாம் அதன் பிம்பங்களே.    
* கவலை, பயத்திற்கு  இரையாக வேண்டாம். தெய்வத்தை நம்பி உழைப்பில் ஈடுபடுங்கள்.  
* அறிவிலும், செயலிலும் தெய்வத் தன்மையை வெளிப்படுத்தும் முயற்சியில் மனிதன் ஈடுபட வேண்டும்.
* உலகம்  வியக்கும் விதத்தில் நன்மை கைகூட விரும்பினால், அதற்கு பக்தி ஒன்றே வழி.
* எல்லா சாஸ்திரங்களும் ஒரே உண்மையைத் தான் சொல்கின்றன. ஆனால் அனைவருக்கும் ஒரே சாஸ்திரம் பொருந்தாது.
* தியானப்பயிற்சியால் மனதில் நல்ல சிந்தனை படிப்படியாக வளரும். தியானத்தின் சக்தியை எளிதாக நினைக்க வேண்டாம். மனதை விரும்பியபடி மாற்றும் வலிமை அதற்குண்டு.
* அன்பை விட சிறந்த குணம் வேறில்லை. அன்புள்ளம் அனைவரையும் அரவணைத்து மகிழும்.  
* தர்மம் என்னும் ஒன்றை தவிர மற்ற உலக விஷயம் அத்தனையும் பொய்யானதே.      
* நன்மை இதுவென்று அறிந்தும் கூட, தீமையை உதறும் வலிமையின்றி மனிதன் தத்தளிக்கிறான்.      
* உங்களை நீங்களே திருத்திக் கொள்வதில் தயக்கம் கொள்ளக் கூடாது.
* ஊர் வாயை மூடும் உலை மூடி ஒன்று இருக்கிறது. அதன் பெயர் காலம்.       
* நீதி வழியில் மக்களை வாழச் செய்யும் கடமை அரசாங்க த்திற்கு இருக்கிறது.       
* உள்ளத்தில் நேர்மை, தைரியம் இருந்தால் செல்லும் பாதை நேரானதாக இருக்கும்.   
* ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. நடைமுறைக்கு பொருந் தாததை விட்டு அறிவுக்கு முன்னுரிமை தர வேண்டும்.        
* எப்போதும் பாடுபடு. உழைத்து வாழ்வதில் தான் சுகமிருக்கிறது. உழைக்கும் இடத்தில் வறுமை, நோய்க்கு இடமிருக்காது.
* தனக்கும், பிறருக்கும் துன்பம் தருவது பாவம். தனக்கும், பிறருக்கும் இன்பம் தருவது புண்ணியம்.      
* மனதால் பிறருக்கு தீங்கு நினைத்தாலும் குற்றமே. அதற்குரிய தண்டனையையும் அனுபவிக்க நேரிடும்.      
* எங்கும், எப்போதும் மனிதன் நேர்மையை பின்பற்றி வாழ வேண்டும்.      
* அணுவளவும் பிறரை ஏமாற்றுவதில்லை என்னும் உறுதி இருந்தால் மனிதன் கடவுளுக்கு நிகராவான்.     
* எந்த செயலுக்கும் காலம் ஒத்து நின்றால் ஒழிய அதனை நிறைவேற்றும் சக்தி மனிதனுக்கு கிடையாது.      
* எல்லா நன்மைக்கும் தாயாக இருப்பது துணிவு. கல்வி, செல்வம், வீரம் அனைத்தும் துணிவால் பெற முடியும்.    
* படிப்படியான வளர்ச்சி என்றும் நிலைத்திருக்கும்.  வேகமான வளர்ச்சி,  சென்ற வேகத்தில் கீழே தள்ளி விடும்.
* பணக்காரன் சமத்துவ எண்ணத்துடன் இருந்தால் உலகமே சீர் பெறும்.     
* உண்மையை உயிராக மதித்துப் போற்று. உண்மையான வாக்கே
அருள் வாக்கு என்று சொல்லப்படும்.    பண்படுத்துகிறார் பாரதியார்

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தன் தாயான வினதையின் துன்பம் போக்க தேவலோகம் சென்ற கருடன், அமிர்தகலசம் பெற்று திரும்பிக் ... மேலும்
 
சென்னை அருகிலுள்ள இலம்பையங் கோட்டூரில் சந்திர சேகரேஸ்வரர் கோயில் உள்ளது. தற்போது இத்தலம் ... மேலும்
 

மரண பயம் விலக... அக்டோபர் 15,2026

மண்ணில் பிறந்த உயிர் என்றாவது ஒருநாள் இறந்தே ஆக வேண்டும். மனிதர்கள் அதிகபட்சமாக நுாறாண்டு காலம் ... மேலும்
 

மதனை எரித்த சிவன் அக்டோபர் 15,2026

மயிலாடுதுறையில் இருந்து கொண்டல் செல்லும் ரோட்டில் 3 கி.மீ., துாரத்தில் உள்ள தலம் கொருக்கை. இங்கு ... மேலும்
 

ஆபத்து காலத்தில்... அக்டோபர் 15,2026

இலங்கையில் சீதையை தேடி அலைந்தார் அனுமன். அவரைக் கண்ட இலங்கை காவல் தெய்வம் லங்கிணி, ‘‘ ஏ!குரங்கே! இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar