மெஞ்ஞானபுரம் பரி.பவுலின் ஆலய பிரதிஷ்டை விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜன 2012 10:01
மெஞ்ஞானபுரம்:மெஞ்ஞானபுரம் பரி.பவுலின் ஆலய பிரதிஷ்டை விழா மற்றும் அசனபண்டிகை விழா துவங்கியது.மெஞ்ஞானபுரம் பரி.பவுலின்165 வது பிரதிஷ்டை மற்றும் அசன விழா கடந்த 19ம் தேதி துவங்கியது. முதல் நாளில் ஆவிக்குரிய கன்வென்ஷன் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மெஞ்ஞானபுரம் தலைமை குருவானவர் குரோவ்ஸ் பர்னபாஸ் ஆரம்ப ஜெபம் செய்தார். சிங்கப்பூர் மெதடிஸ்ட் திருச்சபை தலைவர் நகுளன்ஜேம்ஸ் நற்செய்தி கொடுத்தார். விழாவில் இன்று மெஞ்ஞானபுரம் தென்கிழ சுவிசேஷ கன்டத்தினரின் பல்சுவை நிகழ்ச்சி நடக்கிறது. பல்சுவை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மங்களராஜ்,பிராங்கிளின் ஆகியோர் செய்துள்ளனர். தொடர்ந்து ஐஎம்எஸ் சின் கலை நிகழ்ச்சிநடக்கிறது. 22ம் தேதி ஆயத்த ஞாயிறு நடக்கிறது. இதில் மோகனசுந்தரம் தேவ செய்தியளிக்கிறார். 23ம் தேதி இன்னிசை விருந்து நடக்கிறது.வரும் 24ம் தேதி ஸ்தாபனங்களின் கலை நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 25ம் தேதி அதிகாலை 5 மணிக்கு திருவிருந்து ஆராதனை நடக்கிறது. இதில் இடையர்காடு சேகரகுரு ஜேசுபாதம் தேவசெய்தியளிக்கிறார். இரவு.7.15 மணிக்கு பண்டிகையின் ஆயத்த ஆராதனை நடக்கிறது. இதில் நாஞ்சான்குளம் சேகரகுரு ஜான் சாமுவேல் தேவ செய்தியளிக்கிறார்.26ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு ஆலய பிரதிஷ்டை பண்டிகை ஆராதனை மற்றும் பரிசுத்த திருவிருந்து ஆராதனை நடக்கிறது. இதில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பேராயர் ஜெபசந்திரன் கலந்துகொண்டு ஆசியுரை வழங்குகிறார். திருச்சி,தஞ்சாவூர் பேராயர் பால்வசந்தகுமார் தேவ செய்தியளிக்கிறார். அன்று காலை 6 மணிக்கு ஜான்தாமஸ் நினைவிடத்தில் மரியாதை செலுத்துதல் மற்றும் அசன வைபவம் ஜெபித்து ஆரம்பித்து வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலை 3.30 மணிக்கு அசன நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு அம்புரோஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது. ஆலய பிரதிஷ்டை மற்றும் அசனப்பண்டிகை விழாவிற்கான ஏற்பாடுகளை மெஞ்ஞானபுரம் குருவானவர்கள், சபைஊழியர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் சபையினர் செய்துவருகின்றனர்.