வால்பாறை : வால்பாறை எம்.ஜி.ஆர்., நகர் ஸ்ரீ மாரியம்மன் கோவிலின் 28ம் ஆண்டு திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருக்கொடியை வால்பாறை இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி ஏற்றினார். விழாவில் இன்று (21ம்தேதி) காலை 10.00 மணிக்கு எம்.ஜி.ஆர்., நகர் மகளிர் அணி சார்பில் அம்மனுக்கு சீர்வரிசை கொண்டுவரப்படுகிறது. காலை 10.30 மணிக்கு அம்மன் திருக்கல்யாணத்தை நகராட்சித்தலைவர் சத்தியவாணிமுத்து, முன்னாள் நகராட்சித்தலைவர் கணேசன் ஆகியோர் துவக்கி வைக்கின்றனர். வரும் 22ம் தேதி காலை 11.00 மணிக்கு ஸ்ரீகருப்புசாமிக்கு அபிஷேக பூஜைகள் நடக்கிறது. அதனை தொடர்ந்து கெடா வெட்டுதல் நடக்கிறது. மாலை 3.00 மணிக்கு நடுமலை ஆற்றிலிருந்து பூவோடு எடுத்துவரப்படுகிறது. மாலை 5.00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் நடராஜ், வெள்ளைசாமி, சரவணன், ராஜலிங்கம்,ரெங்கநாதன் உட்பட பலர் செய்து வருகின்றனர். "பேபி ஹூட் ÷ஷாரூம் திறப்பு விழாவில்மாவட்ட கவுன்சிலர் மனோன்மணி குத்துவிளக்கேற்றினார். அருகில், எம்.எல்.ஏ., முத்துகருப்பண்ணசாமி, நகராட்சி தலைவர் கிருஷ்ணகுமார், துணைத் தலைவர் விஜயகுமார் ஆகியோர் உள்ளனர்.