பதிவு செய்த நாள்
26
ஜூன்
2018
11:06
திருப்பூர்: கதித்தமலை ஸ்ரீ வெற்றி வேலாயுதசுவாமி கோவில் கும்பாபிஷேக, முதலாம் ஆண்டு விழா நேற்று நடந்தது. திருப்பூர், ஊத்துக்குளி அருகே, ஆயிரம் ஆண்டுகள் பழமையான, கதித்தமலை ஸ்ரீ வெற்றி வேலாயுதசுவாமி கோவில் உள்ளது. கோவிலில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு விழா நேற்று நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம், மாலை யாக சாலை பூஜைகள், வேத மந்திரங்கள் முழங்க நடந்தது. நேற்று காலை, 9:00க்கு, இரண்டாம் கால யாக பூஜை, 108 கலச பூஜை, ஸ்ரீ ருத்ர ஜெபம், நிறைவேள்வி நடந்தது. பகல், 12:00க்கு, சுவாமிக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது. தொடர்ந்து, மகா தீபாராதனை, அன்னதானம் நடந்தது. மாலை, 6:00க்கு, திருக்கல்யாண உற்சவம், சுவாமி திருவீதி உலா நடந்தது.