லட்சுமி நாராயண வேணுகோபால சுவாமி கோவிலில் சக்கரத்தாழ்வார் திருநட்சத்திர விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூன் 2018 11:06
கோவை:பெரியகடை வீதி லட்சுமி நாராயண வேணுகோபால சுவாமி கோவிலில், நேற்று சக்கரத்தாழ்வார் திருநட்சத்திர திருவிழா நடந்தது. ஆனி மாதம் வளர்பிறை திதியில் வரும் சித்திரை நட்சத்திரத்தில், சக்கரத்தாழ்வார் ஜெயந்தி பெருமாள் கோவில்களில் விசஷே திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. கோவை பெரியகடை வீதியிலுள்ள லட்சுமி நாராயண வேணுகோபால சுவாமி கோவிலில், சக்கரத்தாழ்வார் ஜெயந்தியை ஒட்டி, சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சன அபிஷேகம் நடந்தது. இதையடுத்து, சுதர்சன மூலமந்திர ஜெபமும்,கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில், மகாசுதர்சன ஹோமமும் நடந்தது. ஹோமம் பூர்ணாஹுதியோடு நிறைவடைந்தது.கோவிலில் எழுந்தருளியுள்ள சக்கரத்தாழ்வாருக்கு, சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில், சக்கரத்தாழ்வார் பக்தர்களுக்கு காட்சியருளினார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.