திண்டுக்கல்: திண்டுக்கல் ம.மு.கோவிலுார் பிரிவு அக்சயா வித்யாலயா வளாகத்தில் மகாராஷ்டிராவை சேர்ந்த சுவாமி ஹர்தாஸ் அருள் ஆசி வழங்கினார். மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயரவும், குழந்தைகள் முதல் முதியவர்களுக்கு இலவச மருந்தில்லா (ஹீலிங்) மருத்துவ முகாம் ஜூன் 23ல் துவங்கியது. தினமும் தரிசனமும், யாகமும் நடக்கிறது. இன்று கடைசிநாள். அனுமதி இலவசம். இதில் கே.நஞ்சப்ப கவுண் டர், கல்வியியல் கல்லுாரி முதல்வர் ஆர்.கே.கமலமணி, கல்லுாரி தாளாளர் இ.என்.பழனிச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.