பதிவு செய்த நாள்
30
ஜூன்
2018
12:06
செஞ்சி: அகலுார் மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. செஞ்சி தாலுகா, அகலுார் கிராமத்தில் உள்ள முப்பெரும் தேவர்கள், மாரியம்மன் கோவில் திருப்பணி செய்து நாளை, மகா கும்பாபிஷேகம் செய்ய உள்ளனர். இதை முன்னிட்டு இன்று காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமமும், மாலை வாஸ்து சாந்தி, பிரவேச பலி, காப்பு கட்டுதல், யாகசாலை எழுந்தருளல் ஆகியன செய்ய உள்ளனர். நாளை காலை 6:00 மணிக்கு எஜமான சங்கல்பம், தம்பதி பூஜை, மூலமந்திர ஹோமமும், 8:00 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், 9:00 மணிக்கு கடம் புறப்பாடும், 9:30 மணிக்கு முப்பெரும் தேவர் கும்பாபிஷேகமும், 10:00 மணிக்கு விநாயகர், மாரியம்மன், முருகர், நவக்கிரகங்களுக்கு மகா கும்பாபிஷேகமும் செய்ய உள்ளனர்.