கணவனுக்கும், மனைவிக்கும் இடையே ஆழமான சிநேகிதம் இருக்க வேண்டும். அவர்களுடைய குடும்ப வாழ்க்கை கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இரண்டு செடிகளை ஒன்றோடொன்று ஒட்ட வைத்தோம் என்றால் அது புதிய செடியை உருவாக்குகிறது. ஒட்டு பழத்தின் சுவை மிக ருசியானது. அதைப் போல ஒருவரோடு ஒருவர் இணைந்து அன்பில் ஐக்கியம் ஆகும் போது, அந்தக் குடும்பம் மேன்மை உள்ளதாய் இருக்கும். குடும்பம் எனும் ஒட்டுச்செடி, கிறிஸ்துவோடு ஒட்ட வைக்கப்பட வேண்டும். அவரே மெய்யான செடி. நாம் அவரில் கலந்திருப்போம் ன்றால், மிக சுவையுள்ள கனிகள் கிடைக்கும். உங்களுடைய வாழ்க்கையில் உங்களோடு இணைந்து ஜெபிக்கக்கூடிய நண்பர்களை உருவாக்கிக் கொள்ளுங்கள். உண்மையாய், ஒருவருடைய பாரத்தை ஒருவர் சுமந்து ருவருக்கொருவர் மன்றாடுகிற சிநேகிதர்கள் அவசியம்.