காரையூர் திருவொற்றிநாதர் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூலை 2018 12:07
திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் காரையூரில் புவனேஸ்வரி அம்பாள் சமேத திருவொற்றிநாதர் சுவாமி கோயிலில் 400 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் நடந்தது. இக்கோயிலில் அறநிலையத்துறையின் நிதி மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் திருப்பணிகள் நடந்தன. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜூன்28 ல் யாகசாலை பூஜைகள் துவங்கின. தொடர்ந்து நான்கு கால யாகசாலை பூஜைகள் நடந்தன. கும்பாபிஷேகத்தன்று காலை 9:15 மணிக்கு யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடு ஆகி கோபுர,விமானங்களுக்கு சிவாச்சார்யார்களால் எடுத்துச் செல்லப்பட்டது. தொடர்ந்து காலை 9:50 மணிக்கு சிவாச்சார்யார்கள் புனித நீரால் கும்பாபிஷேகம் நடத்தினர். பின்னர்மூலவருக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.