பதிவு செய்த நாள்
07
ஜூலை
2018
12:07
ஆர்.கே.பேட்டை: புதிதாக கட்டப்பட்ட பெரியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம், நேற்று காலை நடந்தது. ஆர்.கே.பேட்டை அடுத்த, வெள்ளாத்துார் கிராமத்தின் வடமேற்கு பகுதியில், பெரியாண்ட வர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு, நேற்று காலை, கும்பாபிஷேகம் நடந்தது. இதற்கான யாகசாலை பூஜை, நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று காலை, 10:00 மணிக்கு யாகசாலையில் இருந்து, கலசங்கள் கோவில் கோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டன. உடன், கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. வெள்ளாத்துார் கிராமத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர்.