Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாகாளியம்மன் கோவிலில்மகா ... பள்ளித்தென்னல் சித்தர் கோவிலில் 109ம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2018
01:07

தர்மபுரி: தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலில், சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடந்தன. தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலுக்கு, தேய்பிறை அஷ்டமி நாளில், பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள், சாம்பல் பூசணியில் தீபம் ஏற்றி, நேர்த்திக்கடன் செலுத்தி, கோவிலை, 18 முறை சுற்றி வலம் வந்து, காலபைரவரை தரிசனம் செய்வது வழக்கம்.


இம்மாத தேய்பிறை அஷ்டமி நாளான நேற்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். பின், சாம்பல் பூசணியில் தீபம் ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக, காலை, 6:00 மணிக்கு அஷ்டபைரவ யாகம், அஷ்டலஷ்மி யாகம், தனகார்சன குபேரயாகம், அதிருந்ர யாகம் நடந்தது. தொடர்ந்து, 64 வகையான அபி?ஷகங்கள், 1,008 அர்ச்சனை, 28 ஆகம பூஜைகள் நடந்தன. பின், மூலவருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு காலை, 11:00 மணிக்கு மேல், பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். 12:00 மணிக்கு உற்சவ தட்சணகாசி காலபைரவர், கோவிலை சுற்றி மூன்று முறை தேரில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நள்ளிரவு 12:00 மணிக்கு, 1,008 கிலோ மிளகாய் வற்றல் யாக பூஜை நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar