பள்ளித்தென்னல் சித்தர் கோவிலில் 109ம் ஆண்டு குருபூஜை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூலை 2018 01:07
கண்டமங்கலம்: கண்டமங்கலம் ஒன்றியம், பள்ளித்தென்னல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஜீவ சமாதி கோவிலில் முப்பெரும் விழா நடந்தது. தட்சிணாமூர்த்தி சுவாமிகளின் 109ம் ஆண்டு குருபூஜை விழா, ஜீவ அருளுண்மைகள் நுால் வெளியீட்டு விழா மற்றும் மண்டல அபிஷேக நிறைவு உள்ளிட்ட முப்பெரும் விழா நடந்தது. புதுச்சேரி சற்குரு ஓட்டல் மேலாண் இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். சுவாமிகள் குரு பூஜை விழா நேற்று முன்தினம் காலை 5.45 மணிக்கு மங்கள இசையுடன் துவங்கியது. காலை 7:00 மணிக்கு அரும்பார்த்தபுரம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஆன்ம வழிபாட்டு சபை மற்றும் தட்டாஞ்சாவடி வள்ளலார் சன்மார்க்க சாதனை சங்கத்தின் சார்பில், திருவருட்பா அகவல் ஓதுதல் நடந்தது. காலை 10:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனை, 12.30 மணிக்கு அன்னம் விழா நடந்தது.
நுால் வெளியீட்டு விழா: விழாவிற்கு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் தலைமை தாங்கினார். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் நாராயணசாமி வரவேற்றார். திண்டிவனம் மானுார் ஓய்வுபெற்ற தமிழாசிரியர் ஏழுமலை நுாலை வெளியிட்டார்.
மண்டல அபிஷேக நிறைவு விழா: பிற்பகல் 2.30 மணிக்கு மண்டலாபிஷேக வேள்வி துவங்கியது. மாலை 4.00 மணிக்கு பூர்ணாஹூதி, மாலை 5.00 மணிக்கு மண்டல அபிஷேக நிறைவு கலச நன்னீராட்டு விழா, மாலை 6.00 மணிக்கு 108 சிவலிங்க மகா பூஜை, இரவு 7.00 மணிக்கு சிவலிங்க மகா வழிபாடும் நடந்தது.