மதுரை மீனாட்சி அம்மன் ஆடி முளைக்கொட்டு திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூலை 2018 10:07
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் ஆடி முளைக்கொட்டு திருவிழா நேற்று (15ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் அம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 24ம் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது. விழாவையொட்டி கோயில் மற்றும் உபயதாரர் சார்பில் மீனாட்சி அம்மனுக்கு தங்கரத உலா, உபய திருக்கல்யாணம் போன்ற சேவைகள் நடத்திட இயலாது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. விழா ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.