பதிவு செய்த நாள்
20
ஜூலை
2018
01:07
இடைப்பாடி: சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே, ஆலச்சம்பாளையம் பகுதியில், மோலானி முனியப்பன் கோவில் திருவிழா நேற்று நடந்தது. 500க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இடைப்பாடி அருகே, ஆலச்சம்பாளையம் மோலானி முனியப்பன் கோவிலில், ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வரும் முதல் வியாழக்கிழமையன்று திருவிழாவும், சிறப்பு பூஜைகள் நடப்பதும் வழக்கம். இந்தாண்டுக்கான விழா, நேற்று மாலை நடந்தது. இடைப்பாடி பகுதி மட்டுமின்றி, சுற்றுப்பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். விழாவில், 500க்கும் மேற்பட்ட ஆடுகளையும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சேவல்களையும் பலியிட்டு, முனியப்பன் சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.