பதிவு செய்த நாள்
20
ஜூலை
2018
01:07
ப.வேலூர்: ப.வேலூர், மகா மாரியம்மனுக்கு, இன்று, 28 வது ஆண்டு பால்குட அபிஷேக விழா நடைபெறுகிறது. ப.வேலூரில் எழுந்தருளியுள்ள மகாமாரியம்மனுக்கு, ஆடி முதல் வெள்ளிக்கிழமையன்று பால்குட அபிஷேக விழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு விழாவை முன்னிட்டு, இன்று காலை, 9:30 மணியளவில் கோவிலில் இருந்து பக்தர்கள் காவிரி ஆற்றிற்கு சென்று புனித நீராடி பால்குடங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்வர். பகல், 12:00 மணியளவில் மாரியம்மனுக்கு பால்குட அபிஷேக விழா, சிறப்பு அலங்காரம், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும், இரவு, 7:00 மணியளவில் அம்மன் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.