பதிவு செய்த நாள்
20
ஜூலை
2018
01:07
சென்னிமலை: சென்னிமலை, மலை மீதுள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு ஆண்டுதோறும், ஆடி மாத விசாக நட்சத்திரத்தில், சென்னிமலை கைத்தறி மற்றும் சாய சாலை உரிமையாளர் சங்கம் சார்பாக, 1,008 குட பாலாபிஷேகம் செய்யப்படுகிறது. வரும், 22ல் பாலாபிஷேக விழா, 51வது ஆண்டாக நடக்கிறது. அன்று அதிகாலை, 5:45 மணிக்கு, பால் குடங்களுடன், கைலாசநாதர் கோவிலில் இருந்து, திருவீதி வலம் வந்து, மலை கோவிலை ஊர்வலம் அடைகிறது. காலை, 10:30 மணிக்கு சுப்பிரமணியருக்கு பாலாபிஷேகம் தொடங்கி நடக்கிறது. அதை தொடர்ந்து சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. மலை கோவில் வளாகத்தில், அன்னதானம் வழங்கப்படுகிறது.