நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் மழை வேண்டி விளக்கு பூஜை நடந்தது. நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவில் வராஹி சப்த கன்னிக்கு தனி சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் கடந்த 12ம் தேதி முதல் அஷ்ட வராஹி நவராத்திரி பூஜைகள் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மழை வேண்டி பெண்கள் விளக்கு பூஜை செய்தனர். இரவு அம்மன் வீதியுலா நடைபெற்றது. நேற்று பூங்கரக ஊர்வலம், சாகை வார்த்தல் நடந்தது.