மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம், -வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் விழா கொடியேற்றம் நேற்று நடந்தது. கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலும் ஒன்று. இங்கு ஆடிக்குண்டம் விழா, வெ குவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்தாண்டு ஆடிக்குண்டம் விழா கடந்த, 17ம் தே தி பூச்சாட்டுடன் துவங்கியது. நேற்று காலை கொடியேற்ற விழா நடந்தது. சிங்கம் உருவம் பதித்த இரண்டு கொடிகளை, தேக்கம்பட்டி ஊர் பொதுமக்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்தனர். பவானி ஆற்றின்கரையோரம் உள்ள முத்தமிழ் விநாயகர் கோவிலில், கொடிகளுக்கு பூஜைகள் செய்த பின், வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு கொண்டு வந்தனர். இந்நிகழ்ச்சியில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் உடன் வந்தனர். கோவிலில் அம்மன் முன், கொடிகளை வைத்து, சிறப்பு பூஜை செய்தனர். அதன்பின், கோவில் முன்புள்ள கொடிமரத்தில் ஒரு கொடியை ஏற்றினர். மற்றொரு கொடியை , பந்தல் முன் பச்சை மூங்கிலில் கட்டினர். இன்று மாலை,5:00 மணிக்கு பொங்கல் வைத்து குண்டம் திறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நா ளை அதிகாலை, 3:00 ம ணிக்கு ப வானி ஆற்றிலிருந்து அம்மன் அழைப்பும், காலை, 6:00 மணிக்கு குண்டம்இறங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.