பதிவு செய்த நாள்
27
ஜூலை
2018
02:07
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த, படைவீடு ரேணுகாம்பாள் கோவிலில், ஆடி மாதம் முழுவதும் வெள்ளிக்கிழமைகளில் விழா சிறப்பாக நடந்து வருகிறது. இன்று, இரண்டாம் ஆடி வெள்ளி விழா நடக்க உள்ளது. இன்று, சந்திரகிரகணம் என்பதால், வழக்கத்துக்கு மாறாக, மாலை, 4:30 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடைபெறும். இரவு, 8:30 மணிக்கு விழா முடிக்கப்பட்டு, கோவில் நடை அடைக்கப்படும். நாளை, சந்திரகிரகண சாந்தி பூஜை செய்யப்பட்டு, காலை, 8:30 மணிக்கு பின், பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர், என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.