பதிவு செய்த நாள்
28
ஜூலை
2018
01:07
சேலம்: ஆடி மாத, இரண்டாவது வெள்ளியை முன்னிட்டு, சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலில், சிறப்பு பூஜை, அபி ?ஷகம், நேற்று நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள், சுவாமியை தரிசித்தனர். அதேபோல், அம்மாபேட்டை பலப்பட்டரை மாரியம்மன், குகை மாரியம்மன், அஸ்தம்பட்டி மாரியம்மன், ஓமலூர் பெரிய மாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில், பூஜை நடந்தது. மாலை, அஸ்தம்பட்டி, மாரியம்மன் கோவிலில், 108 திருவிளக்கு பூஜை நடந்தது. அதில், விளக்கு முன் அமர்ந்து, அம்மன் நாமம் கூறி, பெண்கள், குங்கும அர்ச்சனை செய்தனர். அதை முன்னிட்டு, அம்மனுக்கு திருவாரூர் கமலாம்பிகை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏற்பாடுகளை, நிர்வாகி விஷ்ணுகுமார் தலைமையில் குழுவினர் செய்திருந்தனர்.