பரமக்குடி:பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஆடி பிரமோத்ஸவ விழாவில் நேற்று தீர்த்தவாரி உற்ஸவம் நடந்தது. இக்கோயிலில் பிரமோத்ஸவ விழா ஜூலை 19 ல் கொடியேற்றத்துடன்நடந்து வருகிறது. தினமும் பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதிவலம் வந்தார். நேற்று முன்தினம் தேரோட்டமும், நேற்று காலை 10:00 மணிக்கு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் தீர்த்தவாரி மண்டபத்திற்கு முன் எழுந்தருளினார்.