கரூர்: கரூர், கல்யாணபசுபதீஸ்வரர் கோவிலில், கருவூர் சிவனடியார் திருக்கூட்டம், 63 நாயன்மார்கள் திருவீதி உலா, 25ம் ஆண்டு விழா, விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நேற்று காலை முதல், மதியம் வரை, பஞ்சமூர்த்திகள், 63 நாயன்மார்கள், மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை, திருக் கல்யாண உற்சவம் நடந்தது. இதையொட்டி, மாலை, 5:00 மணியளவில், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில், பஞ்சமூர்த்திகளுடன், 63 நாயன்மார்கள், கோவிலில் இருந்து புறப்பட்டு நகராட்சி அலுவலக சாலை, ஜவஹர்பஜார் உள்ளிட்ட மாடவீதிகளில் உலா வந்து, மீண்டும் கோவிலுக்கு வந்து சேர்ந்தது. இதில் ஏராளமான சிவனடியார்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.